×

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 9 படகுகளை அழிக்க உத்தரவு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 9 விசைப்படகுகளை உடைப்பதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 18 விசைப்படகுகள் தலைமன்னார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 9 விசைப்படகுகள் கடலில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் சேதமடைந்து விட்டன. மீதமுள்ள 9 படகுகள் இயந்திரம் பழுதாகிவிட்டது. சேதமடைந்த 9 படகுகளை உடைத்து அழிப்பதற்கும், மற்ற படகுகளை ஏலம் விடவும் இலங்கை கடற்படை அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இலங்கை அரசுஅதிகாரிகள், முற்றிலும் சேதமடைந்த 9 விசைப்படகுகளை உடைத்து அழிக்க ஒப்புதல் தெரிவித்தனர். மேலும், மீதமுள்ள 9 படகுகளை ஏலம் விட இந்திய தூதரக அதிகாரிகள் விரும்பவில்லை. எனவே அவற்றை ஏலம் விட ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து நீதிபதி சிவக்குமார், சேதமடைந்த 9 விசைப்படகுகளை மட்டும் முழுமையாக உடைத்து அழிக்க இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்கினார். மீதமுள்ள 9 படகை ஏலம் விட தடை விதித்தார். …

The post இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 9 படகுகளை அழிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Mannar Court ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை